Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

'கிராமங்களில் உள்ளவர்களும் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்'' -அமைச்சர் உதயநிதி

'கிராமங்களில் உள்ளவர்களும் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்'' -அமைச்சர் உதயநிதி

Sinoj

, புதன், 31 ஜனவரி 2024 (20:35 IST)
கேலோ இந்தியா-2024  விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சார் உதயநிதி ஸ்டாலின் ''கிராமங்களில் உள்ளவர்களும் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் எண்ணம்'' என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்த  நிலையில், நாடு முழுவதிலும் இருந்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேறு தங்கள் திறமையை நிரூபித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்றைய கேலோ  இந்தியா போட்டி  சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.

இதில், மஹாராஷ்டிரா மாநிலம்  தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம்,38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்;

ஹரியானா மாநிலம், 35 தங்கம், 2 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த முறை 8 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு ஹரியானாவை பின்னுத்தள்ளி முதன்முறையாக 2 வது இடம் பிடித்துள்ளது. இது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய கேலோ இந்தியா  நிறைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

''திறமையான வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சியளித்தல் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 வது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொண்ட 2 மணிப்பூர் வீரர்கள் பதக்கம் பெற்றுள்ளனர்.

நகரங்களில் உள்ளவர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதாக இல்லாமல், கிராமங்களில் உள்ளவர்களும் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் எண்ணம்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!