கருணாநிதியின் முதல் மேடை பேச்சு அவர் 8ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது 'நட்பு' என்ற தலைப்பில் பேசிய பேச்சுபோட்டி
கருணாநிதி தொடங்கிய முதல் பத்திரிகை 'மாணவ நேசன்'. 1941ல் முதல் இதழ் வெளியானது
கருணாநிதி தொடங்கிய முதல் அமைப்பு 'தமிழ் மாணவர் மன்றம்'
எம்ஜிஆரை முதன்முதலில் கருணாநிதி சந்தித்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்
கருணாநிதியின் முதல் திருமணம் பத்மாவதி என்பவரோடு. அவருக்கு பிறந்த மகன் தான் மு.க.முத்து
கருணாநிதியின் முதல் நாடகம் 'பழனியப்பன். 1944ல் அரங்கேற்றம் செய்யப்பட்டது
கருணாநிதி கதை வசனம் எழுதிய முதல் திரைப்படம் 'ராஜகுமாரி'. இந்த படம் 1947ல் வெளிவந்தது. எம்.ஜி.ஆர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்
கருணாநிதி முதன்முதலாக குளச்சல் தொகுதியில் கடந்த 1957ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் இன்று வரை அவர் எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்ததில்லை
கருணாநிதி முதல்முறையாக 1969ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
சுதந்திர தினத்தில் கொடியேற்றிய முதல் முதலமைச்சர் கருணாநிதிதான். அதற்கு முன்னர் கவர்னர் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி வந்தனர். 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு முதல்வராக கருணாநிதி கொடியேற்றினார்.
கருணாநிதி. 1971ஆம் ஆண்டுதான் தன்னுடைய பேச்சில் முதல்முறையாக என் உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று கூறி பேச்சை தொடங்கினார்.
கருணாநிதி கட்டிய முதல் பாலம் அண்ணா மேம்பாலம். இந்த பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் 973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட முதல் தகவல் தொழில்நுட்ப் பூங்கா 'டைடல் பார்க். 1997ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கருணாநிதி வாங்கிய முதல் வீடு கோபாலபுரம் வீடு. 1955ஆம் ஆண்டு சரபேஸ்வர அய்யர் என்பவரிடம் இருந்து இந்த வீட்டை வாங்கினார்