கருணாநிதி உடல் அடக்கம் செய்ய தயாரான சந்தன பேழையின் மீது ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என பொறிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றனர். இதையடுத்து அந்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேசமயம், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி தர தனக்கு எந்த ஆட்சபேனையும் இல்லை என டிராபிக் ராமசாமி கூறினார். ஜெயலலிதா நினைவிடம் தொடர்பாக வேறு வழக்குகளும் எதுவும் உள்ளதாக என நீதிபகள் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலுக்கு அருகில் கூடியிருந்த திமுகவினர் உணர்ச்சி மிகுதியில் கூக்குரல் எழுப்பினர். இதை அறிந்து ஆனந்த கண்ணீர் விட்ட மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தொண்டர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு உணர்ச்சி மிகுதியில் அழுதார். அவருக்கு அருகே நின்றிருந்த துரைமுருகன், கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டம் 14 மணி நேர போராட்டத்திற்கு பின் முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அவரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.
மறைந்த திமுக தலைவர் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:00 மணிக்கு தொடங்குகிறது. இராராஜி அரங்கத்தில் இருந்து வாலாஜை சாலை வழியாக அண்ணா சதுக்கத்திற்கு உடல் கொண்டுசெல்லப்படுகிறது. மேலும் அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சந்தனத்தால் செய்யப்பட்ட பேழை தயார் நிலையில் உள்ளது. அதில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என பொறிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தொண்டர்கள் இது அவருக்கு மிகவும் பொருத்தமானது எனவும் கூறிவருகின்றனர்.