2 பவுன் தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண்ணுக்கு அரசு வேலை!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மேட்டூர் அணையை திறக்க சென்றிருந்தபோது இளம் பெண் சவுமியா என்பவர் இரண்டு பவுன் தங்க சங்கிலியை முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து அத்துடன் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தானும் தனது ஓய்வு பெற்ற தந்தையும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தனக்கு அரசு வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார்
இந்த கடிதத்தை அப்படியே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அந்த பெண்ணுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது இளம்பெண் சவுமியாவுக்கு அரசு பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இளம்பெண் சவுமியாவிடம் நேரில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பவுன் தங்கச்சங்கிலி நிவாரண நிதியாக அளித்து உருக்கமாக கடிதம் எழுதிய இளம்பெண் சவுமியாவின் வாழ்க்கை தற்போது பிரகாசமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது