ஓசூரில் வசித்து வருபவர் ராகவேந்திரன். இவரது மனைவி கவிதா. இவருக்குக் கடந்த டிசம்பர் மாதம் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அவருக்கு சிசேரியன் செய்து ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
அதன்பிறகு குழந்தையுடன் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் அவருக்கு வயிறு அவ்வப்போது கடுமையாக வலித்துள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் பெரிதும் சிரமப்பட்டார். பின்னர் அவரது உடல் எடை வேகமாக குறைந்தது.
இந்நிலையில் ஒரு மருத்துவமனையில் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது வயிற்றில் மருத்துவர்கள் முகத்தில் முகக்கவசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.பின்னர் அங்குள்ள சாலையில் மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் தெரிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண்ணின் உறவினர்களுடன் பேசி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடி2கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து உறவினர்கள் கலைந்துசென்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.