வங்க கடலில் வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது