Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவர் கைது

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (21:11 IST)
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் என்பவரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகள் பரவியது. இதுபெரும் சர்ச்சையானது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, தமிழக முதல்வர் இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

எனவே, வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் பற்றி விசாரிக்க பீகார் மா நிலத்தில் இருந்து, 4 அதிகாரிகள் தமிழகம் வந்து கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் என்பவரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ALSO READ: வெளிமாநில தொழிலாளர் பிரச்னை:தி.மு.க. அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை- டிடிவி. தினகரன் டுவீட்
 
இவர், சென்னை அடுத்துள்ள தாம்பரம் மறைமலை நகர் பகுதியில் இருந்து இந்த வீடியோவை வெளியிட்டதும், இவர், தனியார் பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொய்யான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments