Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விஜய் சொன்ன குட்டிக்கதையின் பாண்டிய மன்னர் யார்? இதோ முழு விவரங்கள்..!

விஜய் சொன்ன குட்டிக்கதையின் பாண்டிய மன்னர் யார்? இதோ முழு விவரங்கள்..!

Mahendran

, திங்கள், 28 அக்டோபர் 2024 (17:56 IST)
தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டம் நேற்று நடந்த போது, அதில் விஜய் பேசும்போது, "அந்த சிறிய பையன்  மன்னனாக முடிசூடி போருக்கு சென்றான்" என்று சொல்லி, ஒரு பாண்டிய மன்னனின் கதையை பகிர்ந்தார். அந்த மன்னன் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
 
தந்தையின் மரணத்தால் ஆட்சி பொறுப்பை சிறு வயதிலேயே ஏற்ற அந்த சிறு பையன், போரில் கலந்துகொள்ளும் முன், "போர் என்பது ஒரு சுலபமான விஷயம் அல்ல; அதில் படையையும் வழிநடத்த வேண்டும், எதிரிகளை சமாளிக்கவும் வேண்டும், அதற்கு மேலாக வெற்றியை அடைய வேண்டும். உனக்கு யாரும் துணை இல்லை, நீ எப்படி போரை நடத்துவாய்?" என்று படை வீரர்கள் கேட்டனர்.
 
அப்போது அந்த சிறுவன் எவ்வாறு துணிச்சலுடன் போரில் வெற்றி கண்டான் என்பதற்கான விபரம் சங்க இலக்கியத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. “கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று விஜய் சுவாரஸ்யமாக குட்டிக்கதையை கூறினார்.
 
இதையடுத்து சமூக வலைதளங்களில், "அந்த சிறுவன் எவர்?" என்று பலரும் ஆராய்ந்த போது, தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே அவர் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
 
சங்க இலக்கியம் சொல்வதன்படி, இவர் சிறுவயதில் தந்தை மரணத்திற்குப் பின் அரசை ஏற்றுக்கொண்டு, சேர சோழன் மற்றும் கொங்கு நாட்டின் குறுமன்னர்களின் படையெடுப்புகளை துணிச்சலுடன் எதிர்த்து வெற்றி பெற்றார். மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற நூல்களிலும், நெடுஞ்செழியனின் வீரத்தை பறைசாற்றப்பட்டுள்ளது. மேலும், புறநானூற்றில் கூட அவர் பாடிய செய்யுள் ஒன்றும் உள்ளது என்று தெரிகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு