காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என்ற பகுதியில் இயங்கிவந்த ஒரு தனியார் பள்ளியில், நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிச் சென்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல பள்ளிகள் இணைந்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர், இதில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் பொறுப்பு 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர், விக்னேசுக்கு தரப்பட்டது.
இந்நிலையில், அந்த ஒலிப்பிக் தீப்பந்தத்தில் எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது. மாணவர் இந்த தீபத்தைப் ஏந்திக்கொண்டு ஓடும்போது, பலாமாக காற்றடித்ததில் அவர் மீது தீ பட்டு, அவரது உடல் முழுவதும் பரவியது. பின்னர் அவரை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.