Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற தீர்ப்பு நீதியை நிலைநாட்டும்.! கெஜ்ரிவாலின் விடுதலைக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!

Senthil Velan
வெள்ளி, 10 மே 2024 (18:01 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை பல்வேறு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்திரப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: உதயநிதி மனு மீது பதிலளிக்க நோட்டீஸ்..! பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
 
அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை நிலைநாட்டுவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துவதுடன், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை வலுப்படுத்துகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments