ஆப்கானில் உள்ள பெண்களின் உயர்கல்வி மற்றும், என் ஜி ஓக்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ள தாலிபான்களின் உத்தவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்.
ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதால், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இந்த நிலையில், பழமைவாதிகளாக தாலிபான்கள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.அத்துடன் சிறுமிகள் 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கவும் தடை விதித்துள்ளனர்
இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்து, இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களின் போராட்டத்தை அடைக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாலிபான் களின் இந்த உத்தவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்கான் அரசு உடனடியாக பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறந்து பெண்கள் மற்றும் குழந்தைக்களுக்கு கல்வி சுதந்திரம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
அதேபோல், அந்த நாட்டில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு என்.ஜி.ஓக்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று புதிய உத்தரவிட்டிருந்தது.
என்.ஜி.ஓக்களின் பெண் பணிபுரிவதற்கும் தாலிபான் கள் தடை விதித்துள்ளதற்கும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.