Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 21 May 2025
webdunia

''போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

Advertiesment
udhay

sinoj

, செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:23 IST)
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார்.
 
திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:
 
வடசென்னைக்கு 3 வது முறையாக வருகிறேன்.  தேர்தலுக்காக வருபவர்கள்  நாங்கள் அல்ல. இந்த உச்சி வெயிலில் உற்சாகம் அளித்த தொண்டர்களை பார்க்கும்போதே  நாம் வெற்றி பெறுவோம் என்று தெரிகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என்று பேசினார். மேலும், கடந்த முறை ஒன்றாக வந்த எதிரிகள் இம்முறை தனிதனியாக பிரிந்து வருகின்றனர். கடந்த முறை 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற வைத்தீர்கள். தற்போது 6  லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து திமுக வழக்கு