தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் கடந்த செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது தான் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையில் திருப்பியிருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்கள் தீவிர முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது