Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் அண்ணாமலை எதிர்ப்பு வாக்கு வங்கி இல்லை -கே.சி.பழனிசாமி

தமிழகத்தில் அண்ணாமலை எதிர்ப்பு வாக்கு வங்கி  இல்லை -கே.சி.பழனிசாமி
, சனி, 7 அக்டோபர் 2023 (12:53 IST)
தமிழகத்தில்  அண்ணாமலைக்கு என எதிர்ப்பு வங்கி இல்லை என்று முன்னாள் அதிமுக எம்பி தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியது.

இந்த நிலையில் நேற்று, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,   ‘’2024-ல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்  அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதற்கு வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி, ’’ தமிழகத்தில்  பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு வாக்கு வங்கி அதிகமாக உள்ளது. எனவே திமுக மோடியையும் RSS-ன் கொள்கைகளையும் எதிர்த்து #திராவிடம் VS இந்துத்துவா என்று களம் அமைத்து வாக்குகளை கவர திமுகவும் பாஜகவும் முயற்சி செய்கிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் சித்தாந்த அரசியலை கைவிட்டுவிட்டு மோடியை எதிர்க்க துணிவில்லாமல்  அண்ணாமலை  எதிர்ப்பை மட்டுமே கையிலெடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அண்ணாமலை எதிர்ப்பு வாக்கு வங்கி என்று ஒன்று இல்லை.

எனவே மாபெரும் வெற்றியைப்பெற  அதிமுக   சரியான முறையில் வியூகம் வகுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு