தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது
.
இன்னும் சில தினங்களுக்கு மக்களும் இதைத்தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுபோல் செய்திகளிலும் நாளிதழ்களிலும், இணையதளங்கிலும் ஒவ்வொரு வேட்பாளர்களின் பிரச்சாரங்களும் மக்கள் காதில் விழுந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று விராலிமலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பழனியப்பானை ஆதரித்து உதயநிதி வாக்குகள் சேகரித்தார். இதுகுறித்து, அவர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஜெ மரணம்-ஆர்.கே.நகர் தேர்தல்-குட்கா-கொரோனா கால ஊழல்-ஒப்பந்த பணி நியமனம்-மருத்துவர் மரணம்.... இவ்வளவுக்கு பிறகும், பிபி-சுகர் இருக்கிறது. அதனால் எனக்கு வாக்களியுங்கள் என வரும் குட்கா பாஸ்கரை டெபாசிட் இழக்கவையுங்கள் என விராலிமலையில் அண்ணன் பழனியப்பனை ஆதரித்து வாக்குசேகரித்தேன் எனத்தெரிவித்துள்ளார்.