.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கர் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது. செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நேற்றி இரவு எங்களைப் பின் தொடர்ந்து சிலர் வந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, என் மீது தாக்குதல் திட்டமிட்டது தெரியவந்தது. என் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் காவல்துறையும் தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.
விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.