Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

திருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
, புதன், 3 அக்டோபர் 2018 (13:36 IST)
நேற்று ஜாமீனில் வெளியான மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து பெஙகளூர் போலீஸார் கைது செய்தனர்.

அவர் மீது 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது அவரது உடல்நிலை சரியில்லாமல் இரண்டு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதும் சுகாதாரமான உணவு வழங்கப்படாததுமே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.

இதையடுத்து அவர் மீதான வழக்குகளில் இருந்து ஜாமீன் பெறப்பட்டதை அடுத்து அவர் நேற்று ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து நேற்று இரவு அவர் மருத்துவமனையில் சோதனைக்காக சென்றார். அவரை பரிசோதித்த அவரது மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினர்.

இதையடுத்து அவரது மருத்துவர் எழிலன் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து பேசினார். அதில் ‘திருமுருகன் காந்தி செரிமானப் பிரச்சனை, நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்குப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது இந்த உடல் குறைபாடுகளுக்கு சரியான உணவு உட்கொள்ளாமையேக் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்கேப் ஆகப் பார்த்த கருணாஸ் - செக் வைத்த நீதிமன்றம்