மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆர்.ஜே.டி. கட்சியுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், இங்கே இரண்டு மெகா கூட்டணிகள் போட்டியிடுகின்றன.
மகாயுய்ஹி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.
அதேபோல் மகா விகாஸ் ச்காதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளமும் போட்டியிடும் நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்றும், பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.