Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தை!.. திமுக பிளானே வேற!...

Advertiesment
thiruma
தமிழகத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தை கட்சி கடந்த பல தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.. அரசியல்ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் திமுகவின் கருத்தை ஆதரித்து அந்த கட்சியுடன் விடுதலை சிறுத்தை பயணம் செய்து வருகிறது. ஒருபக்கம் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் முக ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கிறார்.. இருவரும் சகோதரர்கள் போல பழகி வருகிறார்கள்..

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்தபோது திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தைரியமாக முடிவெடுத்து அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் திருமாவளவன். தற்போது ஆதவ் அர்ஜுனா தவெக பக்கம் சென்று விட்டார் என்பது தனிக்கதை..

ஒரு பக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையை துவங்கியிருக்கிறது. விரைவில் விடுதலை சிறுத்தை கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கவிருக்கிறது..

இந்நிலையில், ‘12 தொகுதிகளை கேளுங்கள்’ என விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் திருமாவளவனிடம் சொல்கிறார்களாம்.. எப்படியும் 10 தொகுதிகளுக்கு கீழ் குறையக்கூடாது என திருமாவளவனும் நினைக்கிறாராம்.. ஆனால் திமுக தரப்பில் 6 முதல் 8 தொகுதி வரை மட்டுமே கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம்.. 2021 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு திமுக 6 தொகுதிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவி விவாதங்களில் மொக்கை வாங்கும் தவெக!.. விஜய் போட்ட அதிரடி உத்தரவு..