அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு இன்று காலை முடிந்தது என்பது தெரிந்ததே. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதுமட்டுமின்றி 11 பேர் கொண்ட வழிகாட்டி குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். இதனை அடுத்து அதிமுக அடுத்த கட்டமாக தேர்தலுக்குத் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் இதுகுறித்து கூறியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலில் தற்போது ஜெயலலிதா இருந்தாலே முதல்வராக முடியாது. இந்நிலையில், ஈ.பி.எஸ் இருந்தால் என்ன? ஓ.பி.எஸ் இருந்தால் என்ன?
அதிமுகவின் ஏற்பட்ட முதல்வர் வேட்பாளர் பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து அடுத்த கட்டமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் முதல் கட்டமாக பாமக மற்றும் தேமுதிக கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது