Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது- அண்ணாமலை

Sinoj
வெள்ளி, 8 மார்ச் 2024 (17:51 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் 3 வது முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு பணியாற்றி வருகிறது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிபங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியிலும் பிரசாரத்திலும் வேட்பாளர் தேர்விலும் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  இன்று கோவை  விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது: விரைவில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. தேர்தல் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றாமல் திமுக சிலிண்டர் விலை குறைப்பு பற்றி பேசக்கூடாது.  காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. போதைப்பொருள் விவகாரத்தில் தேடப்படும் ஜாபர் சாதி, திமுகவின் அயலக அணியில் இருந்தவர் ..இதுகுறித்து திமுக எந்தக் கருத்தும் கூறாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், கோவையில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும், ஒரு மாநில தலைவராக தனக்கு பல கடமைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments