Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு வெயில் மண்டையை பிளக்கும் - வானிலை மையம் தகவல்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (13:45 IST)
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
பொதுவாக மார்ச் மாதத்திலேயே கோடை துவங்கி விடுகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. சாலையோரங்களில் குளிர்பான மற்றும் பழச்சாறு கடைகள் தலை காட்டியுள்ளன.  நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 99 டிகிரி பாரன்ஹீர் வெப்பம் பதிவாகியுள்ளது. 
 
இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
இன்று முதல் பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகும். குறிப்பாக இன்றும், நாளையும் நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தொடும். சில இடங்களில் 102 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இந்த முறை வெயிலின் தாக்கம் வருகிற ஜூன் மாதம் 2ம் வாரம் வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதேபோல், மே மாதம் கத்திரி வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். சில பகுதிகளில் கோடை மழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணியலாம், செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து விட்டு இயற்கையான பழச்சாறுகள், மோர், இளநீர், தர்பூசனி உள்ளிட்டவற்றை அருந்தி வெப்பத்தை தணித்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments