ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரை கேவலமாக விமர்சித்து துக்ளக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக்கின் ஆசிரியராக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. சமீபத்தில் தமிழகத்தில் யாருக்கு எதிரான அலை அதிகமாக உள்ளது என புள்ளி விவரத்தோடு டிவிட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இப்போதும் அதிமுகவின் நிலையை குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்தை கேவலமாக சித்தரித்து ஒரு கார்ட்ரூன் துக்ளக் பத்திரிகையில் வரையப்பட்டு வெளியாகியுள்ளது.
அந்த கார்ட்ரூனில் இருப்பதாவது, பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டுக்கு வெளியே ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் அவர்கள் சாப்பிடுவதை நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
அதற்கு ஈபிஎஸ், "உஸ்ஸ்.. யாரும் அழப்படாது. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம் என்று கூறுவதாக அந்த கார்ட்ரூன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மகனுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என ஓபிஎஸ் தனது மகனோடு டெல்லியில் இருந்ததை இது குறிப்பது போல இருப்பதாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.