Publish Date: Fri, 27 Jan 2023 (19:24 IST)
Updated Date: Fri, 27 Jan 2023 (19:26 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவகாசம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மின் எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதால் பிப்ரவரி 28 வரை மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படும் என்றும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.