ஆடி பௌர்ணமியையொட்டி நாளை திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாதம்தோறும் பௌர்ணமி மற்றும் பிரதோஷ காலங்களில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மலையை சுற்றி 14 கிலோ மீட்டருக்கு கிரிவலம் சுற்றி வருவது வழக்கம்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிரிவலம் நடந்து வருகிறது. நாளை ஆடி பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்கு அதிகளவிலான பக்தர்கள் வருவகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.