நொறுக்குத்தீனி பாக்கெட்டுக்களுக்கு தடை
தமிழக அரசு ஏற்கனவே 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது என்பதும் இந்த தடை 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது என்பதும் தெரிந்ததே
இந்த தடையை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் வழக்லும் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் என்று தீர்ப்பு வந்ததால் தமிழகத்தில் தற்போது 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
இந்த நிலையில் உணவு பண்டங்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்ட முடியவில்லை என்றும் எனவே பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பண்டங்கள் அடைத்து விற்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வாரிய தலைவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார்
இதனடிப்படையில் தற்போது உணவு பண்டங்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய வகைகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை குறித்து தமிழக அரசின் அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடை காரணமாக இனி நொறுக்குத்தீனி அடைத்து விற்கும் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது