தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முழு பட்ஜெட் தாக்கல் ஆகஸ்டு 13 அன்று நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.
ஆகஸ்டு 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடந்தபிறகும், 14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு பட்ஜெட் தாக்கல் மீதான விவாதங்கள், அறிவிப்புகள் கொண்ட கூட்டத்தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.