தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்
இன்றைய ஆலோசனைக்குப் பின்னர் ஊரடங்கை நீடிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியுள்ளது
இருப்பினும் ஒருசில நிகழ்வுகளுக்கு மட்டும் தடை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார்
இந்த ஆலோசனையில் என்னென்ன கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கும் தமிழக முதல்வர் இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கைகளை அனுமதிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதை அடுத்து இது குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது