Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி பேச்சால் உடைகிறது கூட்டணி: நாங்குனேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியா?

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (21:42 IST)
சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.
 
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியை திமுக கேட்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று பொங்கி எழுந்துள்ள தமிழக காங்கிரஸ், டெல்லி தலைமைக்கு நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க சம்மதிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை திமுக நாங்குனேரியில் போட்டியிட்டே தீர்வது என்று முடிவு செய்தால் காங்கிரஸ் தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற குரலும் தமிழக காங்கிரஸார் இடையே வலுத்து வருகிறது
 
இந்த ஒரே ஒரு தொகுதியால் ஏற்பட்ட மனக்கசப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியே உடையும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவொரு சிறிய பிரச்சனை என்றும் ராகுல்காந்தி-ஸ்டாலின் சந்திப்பு நடந்தால் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டுவிடும் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments