தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை மீது தமிழ்நாடு அரசுக்கு நிறைய முரண்பாடுகள் உள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கையில் ஏற்புடைய சில அம்சங்களை மட்டுமே ஏற்போம் என தொடர்ந்து வாதிட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி “மற்றவர்கள் சொல்வதை கேட்டு புதிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் முழுமையாக படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து அதிலுள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு மற்றும் மாற்றத்திற்கான கல்வியை அடிப்படையாக கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.