Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன். மாணிக்கவேல் - தமிழக அரசு மோதல் : உண்மை வெளியே வருமா?

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (12:17 IST)
சிலை கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை கோர இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 
சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல திருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதோடு, தமிழகத்தில் 70 சதவீத கோவில்களில் போலியான சிலைகளே இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதோடு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சில விலை மதிப்புடையை சிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்.
 
ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. 
 
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் “ காவல் துறையினர் விசாரணை நடத்திய வர இந்த வழக்கு சரியாகவே சென்றது. ஆனால், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் விசாரணையில் வெளிப்படை தன்மையில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

 
ஆனால், சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை வெளிப்படையாக கூற முடியாது. தன்னிடமுள்ள ஆவணங்களை பெறுவதற்கு மட்டுமே அரசு முயற்சிப்பதாக பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.
 
இதையடுத்து, மாநில காவல்துறை மீது அரசுக்கு நம்பிக்கையில்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கை ஆகஸ்டு 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
அதாவது, சிலை கடத்தல் விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு  தொடர்புள்ளதை பொன். மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். பல வருடங்களாக தமிழக கோவிலில் உள்ள முக்கிய சிலைகளை கடத்தி அவர்கள் வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே வரக்கூடாது என அரசுக்கு சிலர் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாகவே நேர்மையாக செயல்படும் பொன்.மாணிக்கவேலோடு அரசு தரப்பு மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப் பேருந்துகளில் பயணித்தால் இருசக்கர வாகனம், LED TV பரிசு! - போக்குவரத்துக் கழகம் கலக்கல் அறிவிப்பு!

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்..!

கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை..!

2 பேர் உயிருடன் எரித்து கொலை.. 9 பேர் மாயம்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments