கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை கடும் வீழ்ச்சி இருந்த நிலையில் தற்போது தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதால் தமிழக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தக்காளி விலை 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் திடீரென தற்போது தக்காளி விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40 முதல் 42 ரூபாய் வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்தே தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது