பொறியியல் படிப்புகளில் அரசு இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என தொழில்நுட்ப கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், இவ்வாறாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் முதலியவற்றையும் அரசே ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பேசியுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ”அரசு இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டண தொகையை அரசு விரைவில் விடுவிக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும். இதை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்” என கூறியுள்ளார்.