நாளை முதல் தமிழக மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் நவம்பர் 18 முதல் அதாவது நாளை முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் சூறை காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை சூறை காற்று வீசும் என்று கணிக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த நிலையில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.