தமிழக அரசு பொங்கல் பரிசாக ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும் ஒருசில பொங்கல் பொருட்களையும் வழங்கி வருகிறது. இதற்கு நீதிமன்றமும் கட்டுப்பாடு விதித்து வரும் நிலையில் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் திரும்பி அரசுக்கே வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ரேசன் கடையில் ஆயிரம் ரூபாயை பெற்ற பலர் நேராக அந்த பணத்தை டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கு வாங்கி குடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ராஜபாளையத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் மனைவிக்கு தெரியாமல் ரேசன் அட்டையை எடுத்து ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய் வாங்கி மொத்த பணத்தையும் ஒரே நாளில் சரக்கு வாங்கி குடித்துள்ளார். இதனையறிந்த அவரது மனைவி கணவனை தட்டி கேட்டதால் ஏற்பட்ட பிரச்சனை தற்போது காவல்நிலையம் வரை சென்று வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவொரு உதாரண நிகழ்வுதான். இதேபோன்ற நிகழ்வு தமிழகத்தில் பல நடநதுள்ளது.
பொதுமக்கள் இனிமையாக இன்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கொடுக்கும் பரிசுப்பணம் டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வருவதால் பொங்கல் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதுதான் நடைமுறை உண்மை