தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மராமத்து பணி காரணமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை இன்று பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட்டதாலும் சசிகலா அங்கு வருவாரா? ஜெயலலிதா பிறந்தநாளில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவாரா? என்ற கேள்வி எழுந்தது
ஆனால் அமமுக வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது திநகரில் உள்ள இல்லத்திலேயே ஜெயலலிதாவுக்கு சசிகலா மரியாதை செலுத்த இருப்பதாகவும், இன்று அவர் ஜெயலலிதா நினைவிடம் வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் அங்கு வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது