Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வாங்கியே ஆகணும்.. குவியும் மக்கள்! – நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (08:53 IST)
இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்பதால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை நேரமே திறக்கப்பட்டு விட்டன. மேலும் நகை விற்பனையை அதிகரிக்க செய்கூலி, சேதாரம் இல்லை போன்ற அறிவிப்புகளையும் பல நகைக்கடைகள் அறிவித்து வருகின்றன.

பல கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களாகவே பலர் வந்து நகைகளை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments