Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம்; வாக்குப்பதிவு சதவிகிதம் குறையுமா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:28 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறையுமா என்ற அச்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பம் 100 டிகிரியை தாண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறையுமா என்ற அச்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் வழக்கத்தை விட 3 முதல் 5 சதவீதம் வரை அதிக வெப்பம் இந்த ஏழு மாவட்டங்களில் பாதிக்கும் என்பதால் இந்த 7 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 12:00 மணி முதல் 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வட கடலோர மாவட்டங்களிலும் அதிக வெப்பம் என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் வீட்டைவிட்டு வெயிலின் தாக்கத்தை மீறி வெளியே வந்து வாக்களிப்பார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

டிரம்ப் ஆட்சி.. நாட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு சலுகை: கப்பல் நிறுவனம் அறிவிப்பு..!

மீண்டும் மீண்டும் ரயில் விபத்து.. சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து!

பெண்களின் திருமண வயது 9! கடும் எதிர்ப்புகளை மீறி ஈராக்கில் மசோதா நிறைவேற்றம்!

எலாக் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி கொடுத்த டிரம்ப்.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments