Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இன்று திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

இன்று திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?
, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (07:13 IST)
இன்று திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்கவுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் திமுக தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி தலைவராக இருந்தவரை ஸ்டாலின் உள்பட எத்தனையோ கோஷ்டிகள் திமுகவில் இருந்தாலும் அனனவரையும் அரவணைத்து சென்றார். ஆனால் இன்று அந்த கோஷ்டிகளில் ஒருவரான ஸ்டாலின் தலைவரானபோதிலும், அவருடைய தலைமையை கட்சியில் யாரும் எதிர்க்கவில்லை என்பது நல்ல விஷயமே
 
இருப்பினும் திமுக தலைவராகும் ஸ்டாலினுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. முதல்கட்டமாக செப்டம்பர் 5ல் அமைதிப்பேரணியை நடத்தும் அழகிரியின் நடவடிக்கைகளை சமாளித்து கட்சி உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்
 
அடுத்ததாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழல். குறிப்பாக  கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் தோல்வி அடைந்தால் அது கட்சிக்கு மிகப்பெரிய அவமானகரமான விஷயமாக போய்விடும்.
 
webdunia
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிகரமான கூட்டணியை அமைக்க வேண்டும். கனிமொழி உள்பட பலரை திருப்தி செய்யும் வகையில் பதவிகளை வழங்கி அரவணைத்து செல்ல வேண்டும்.
 
இந்த சவால்களை மு.க.ஸ்டாலின் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டு கேட்டு வந்த காங்கிரஸ் வேட்பாளரை செருப்பால் அடித்த பெண்