Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

225 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.. எப்போது விலை குறையும்?

petrol
, ஞாயிறு, 1 ஜனவரி 2023 (08:04 IST)
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அதாவது 224 நாட்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று 225 வது நாளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எதிர்பார்த்ததைவிட அதிகமாக வீழ்ச்சி அடைந்து இருக்கும் நிலையில் அதன் பலனை பொதுமக்களுக்கு தரும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.
 
ஆனால் மத்திய அரசு இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் உள்ளேன்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

66.48 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!