தமிழக சட்டசபை இன்று கூட இருப்பதை அடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு எந்த இருக்கை ஒதுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பும் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை இன்று கூட இருக்கும் நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல அதிமுக தற்போது இரண்டு அணிகளாக இருப்பதை அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருக்கும் ஓபிஎஸ் அவர்கள் குறித்து சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என அதிமுக எம்எல்ஏக்கள் காத்திருக்கின்றனர்.
அதேபோல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இருக்கை எந்த இடத்தில் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் சபாநாயகர் என்று முடிவெடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.