Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ-ஸ்டாலின் இன்று சந்திப்பு: முடிவுக்கு வருமா கூட்டணி சர்ச்சை?

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (08:19 IST)
திமுக கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ், விசிக கட்சிகள் உள்பட எந்த கட்சியும் இப்போதைக்கு இல்லை என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாட்டிற்கு பின்னரே கூட்டணி அமையும் என்றும் சமீபத்தில் துரைமுருகன் கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், திமுகவுடன் உறவு நீடித்து வருவதாகவும், மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி நிச்சயம் அமையும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் திமுக கூட்டணியில் விசிக இருப்பதாக திருமாவளவன் கூறவில்லை. அதேபோல் இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலினும் கூட்டணி குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோமா? இல்லையா? என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று வைகோ கூறினார். வைகோ இதனை தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் ஸ்டாலினிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை

இந்த நிலையில்  திமுக தலைவர் ஸ்டாலினை  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்திக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 4 மணி அளவில், இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  இன்றைய ஸ்டாலின் - வைகோ சந்திப்பு கூட்டணி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திராவில் கடல் வழி விமான சேவை: வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு..!

ராகுலின் 4வது தலைமுறையினர் வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது: அமித்ஷா

ஆழ்கடலுக்குள் செல்லும் இந்தியாவின் முயற்சி! சமுத்ரயான் திட்டம் சோதனை விரைவில்..!

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள்.., வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments