தமிழகத்தில் சில்லறை விற்பனை நிலையங்களில் 1 கிலோ தக்காளி விலை ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் 1 கிலோ தக்காளி விலை ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடி மூலம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்யப்படும் எனவும் இதற்காக நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்டு இன்று 80 முதல் 85 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.