தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் திடீரென தக்காளியின் விலை நேற்று குறைந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தக்காளி விலை இன்று மீண்டும் அதிகரிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி விலை 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் நேற்று திடீரென விலை குறைந்ததால் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக 60 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து 75 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
புறநகர் பகுதிகளில் தக்காளி விலை 80 முதல் 90 ரூபாய் வரை சில்லறை விற்பனையாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. தக்காளி விலை மீண்டும் கிடுகிடு என உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்