Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை  போக்குவரத்து மாற்றங்கள்:

Mahendran

, சனி, 5 அக்டோபர் 2024 (10:13 IST)
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து நாளை  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் இதோ:

காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு.
 
திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை. அதற்கு பதிலாக, சர்தார் படேல் ➙ சாலை காந்தி மண்டபம் வழியாக அண்ணா சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.

பாரிஸில் இருந்து காமராஜர் சாலை வழியாக திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கு தடை. மாறாக, அண்ணா சாலை ➙ தேனாம்பேட்டை ➙ காந்தி மண்டபம் வழியாக திருவான்மியூர் செல்லலாம்.

MTC பேருந்துகள் அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

அதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணா சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாலை. கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை!

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?