ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது போல் சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. னக்கல் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்துதை அடுத்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆம், அங்கு நீர்வரத்து அதிகரித்ததால் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதோடு நீர்வரத்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.