தென்காசி மாவட்டத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், அந்த இடத்தில் பலர் செல்பி எடுக்க வந்து கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து, அந்த நிலத்தின் உரிமையாளர்கள் செல்பி எடுக்க ரூ.25 கட்டணமாக வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, கேரள மக்களுக்கு சூரியகாந்தி மலர் இருக்கும் இடத்தில் புகைப்படம் எடுத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிலையில், கேரளாவிலிருந்து சுற்றுப்பயணமாக வந்த சுற்றுலா பயணிகள் தென்காசி அருகே பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலர்களை பார்த்து ஆச்சரியமடைந்து, அதன் அருகில் செல்பி எடுக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளும், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு உள்ள சூரியகாந்தி மலரை விவசாயம் செய்த விவசாயிகள், செல்பி எடுக்க ஒரு நபரிடமிருந்து ரூ.25 வசூலித்து வருகிறார்கள்.
இதனை அடுத்து, பணத்தை செலுத்தி சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களை ரசித்து, நடுவே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.