குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 நாட்களுக்கு பின் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என்றும், மெயின் அருவியில் ஆண்கள் பகுதி நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் பெண்கள் பகுதி வழியாக தடுப்பு அமைத்து ஆண்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மெயின் அருவி பகுதியில் மராமத்து பணிகள் நடந்ததால் கடந்த சில நாட்களாகவே மெயின் அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதை அடுத்து மெயின் அருவியில் செய்து கொண்டிருந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்தும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.