சென்னையில் பைக்கில் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்து சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் விபத்துகளையும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்து காவல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்னதாக இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. எனினும் மக்கள் பலர் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்று வரும் நிலையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 21,984 வழக்குகளும், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 18,035 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.