நகர்ப்புற தேர்தலில் மொத்தம் 99 இடங்களில் வெற்றி கண்டுள்ளது என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டது என்பது தெரிந்ததே. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொள்ளாத நிலையில் நகர்ப்புற தேர்தலில் மொத்தம் 99 இடங்களில் வெற்றி கண்டுள்ளது என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 3 இடங்களிலும், நகராட்சி வார்டு உறுப்பினார் பதவிகளில் 33 இடங்களிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 66 இடங்களிலும் அக்கட்சி வெற்றி கண்டுள்ளது. மேலும் ஒரு பேரூராட்சியை கைப்பற்றி இருக்கிறது.